சிமார்ட் வகுப்பறை இன்று முதல்… மாணவர்கள் மகிழ்ச்சி

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரிக்கான சிமாட் வகுப்பறைகள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

3 மில்லயன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் பாவணைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.

மாணவர்கள் தமது கற்றல் தேவைகளிற்காக இணையத்தில் தேடுதலை தாாகவே மேற்கொண்டு கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்குடன் குறித்த வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிவஞானமூர்த்தி, பா ம உ சேனாதிராஜா, கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts