ஆண் குழந்தைக்காக 30 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 83 வயது தாத்தா..!

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 83 வயது முதியவர் ஒருவர் 30 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுக்ராம் பைரவா. வயது 83. ஏராளமான சொத்துகளுக்கு சொந்தக்காரர். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றிருந்த நிலையில் தற்போது இரண்டாவதாக 30 வயது இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பைரவாவின் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சுக்ராம் பைரவாவுக்கு முதல் மனைவி மூலம் ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்திருக்கிறார்கள். ஆனால் சுக்ராம் பைராவின் மகன் கடந்த 20 வருடங்களுக்கு முன் தீராத நோயால் உயிரிழந்துவிட்டார். இரண்டு மகள்கள் மட்டும் தற்போது உள்ளனர். அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது.

மகனின் மரணத்திற்கு பின் மூதாதையர் சொத்துகளை எல்லாம் சுக்ராம் பைரவாவே கவனித்து வந்திருக்கிறார். இதனிடையே, தனது சொத்துக்களை கவனித்துக்கொள்ள ஒரு மகன் வேண்டுமென்றும் அதற்காக தான் இரண்டாவது திருமணம் ஒன்றை செய்துகொள்ளப் போவதாகவும் சுக்ராம் பைரவா தனது முதல் மனைவியிடம் தெரிவித்திருக்கிறார். அவரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்ல பைராவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதனிடையே, மூத்த மனைவியை விவகாரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளதால் பைராவின் திருமணம் சட்டவிரோதமானது என்றும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts