அடுத்தடுத்து மாயமாகும் இளம்பெண்கள்! பதறும் பெற்றோர்..

பணிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என மணிகண்டன் என்பவர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் 17 மகள், சோழிங்கநல்லூர் அருகே உள்ள காரப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பணிபுரிகிறார். இந்நிலையில் காலையில் வழக்கம் போல் பணிக்கு சென்ற அப்பெண், வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை மணிகண்டன், தனது மகள் கடத்தப்பட்டுள்ளதாக கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்து 24 நேரம் ஆகியும், காணாமல் போன பெண் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என காவல்துறை மீது தந்தை மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நேற்று சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள முருகன் என்பவரின் மகள் கனிமொழி பணிக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக நீலாங்கரை காவல்நிலையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்று ஒரு நாள் முடிவதற்குள், தாம்பரம் பகுதியை சேர்ந்த மேலும் ஒரு பெண் காணாமல் போனது அப்பகுதி பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மாதம் சென்னை பெரும்பாக்கத்தில் பெண் ஐ.டி ஊழியர் லாவண்யாவை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பணிக்கு சென்ற இரண்டு பெண்கள் மாயமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts