மக்கள் சாவிலும் கூட “சம்திங்” எதிர்பார்க்கும் கார்பரேட்டுகள்: குழி தோண்டி மூடி மறைக்கப்பட்ட இரகசியம்..?

“புகை நமக்கு பகை” பதாகைகளில் மட்டும் தான் காண முடிகிறது. ஆனால் இன்றவும் அது போன்ற வாசகங்களால் புகை பிடிப்போரின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.

கடந்த வருடத்தில் மட்டும் உலக அளவில் 71 லட்சம் பேரின் மரணத்துக்கு புகையிலை காரணமாகியுள்ளது.

எந்த அளவிற்கு புகையிலையால் மக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு நிறுவனங்களின் வருமானம் அதிகரித்திருக்கிறது என்று அர்த்தமாம்.

அந்த வகையில், கடந்த 2015ல் மட்டும் உலகின் மிகப்பெரிய புகையிலை நிறுவனங்கள் ஈட்டிய லாபம் 6,227 கோடி டாலரை தொட்டுள்ளது.

கணக்குப்படி பார்த்தால், ஒவ்வொருரின் மரணத்தில் இருந்தும் அந்த நிறுவனங்கள் 9,730 டாலர் மதிப்பிலான லாபத்தை ஈட்டியுள்ளன என்பது தெளிவாகியுள்ளது.

மொத்தமாக உலக அளவில் பார்க்கும் பொழுது, ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் கோடி டாலர் புகையிலைப் பொருள்களுக்காக செலவிடப்படுகிறது. அப்படியானால் ஒட்டுமொத்த உலக பொருளாதர உற்பத்தியில் 2 சதவீதம் அளவுக்கு இது சமமென்று கூறப்படுகிறது.

புகையிலை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முக்கிய இலக்கே புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்கள் கடுமையாக பின்பற்றாத நாடுகள் தான்.

புகையிலையால் பரவும் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத ஆப்பிரிக்கப் பகுதிகளில் மட்டும் கடந்த 30 வருடத்தில் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளதை இதற்கு உதாரணமாக கூறலாம் .

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts