கடைசி இரண்டு நாளில் ஜெயலலிதா எப்படி இருந்தார்! 3 மணி நேரம் விடாத கிடுக்கிப்பிடி விசாரணை!

கடைசி இரண்டு நாளில் ஜெயலலிதா எப்படி இருந்தார்! 3 மணி நேரம் விடாத கிடுக்கிப்பிடி விசாரணை!

ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனில் இன்று ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவகுமார் ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் மூன்று மணி நேரம் இடைவிடாது பல கிடுக்குபிடியான கேள்விகளை கேட்டிருக்கிறார். சிவகுமார் ஆஜர் ஆவது இது இரண்டாவது முறையாகும்.

அப்போது சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன்னரே வீட்டில் மயக்கம் அடைந்துவிட்டார் ஜெயலலிதா என மருத்துவர் சிவகுமார் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த அறிக்கைகளை விசாரணை கமிஷனில் தெரிவித்ததாகவும், மயக்கமடைந்த ஜெயலலிதா முதலுதவி சிகிச்சைக்கு அளித்த பிறகே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும் சிவகுமார் கூறினார்.

சரும பிரச்சனைகளுக்காக ஜெயலலிதா ஸ்டெராய்டு மாத்திரைகளை உட்க்கொண்டார் எனவும், அதனால் அவர் உடலில் நலக்குறைவு ஏற்படவில்லை எனவும், மருத்துவமனையில் சேர்க்கும் வரை சிவகுமார் உடனிருந்ததாகவும் தெரிவித்தார்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts