உலக மக்கள் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி- செயலிழந்த விண்கலம் இங்கே தான் விழப்போகிறது: இடத்தை கணித்த ஆராய்ச்சியாளர்கள்..!!

நாசா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக நானும் வானில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க போகிறேன் என்று கூறிக்கொண்டு, அடங்காபிடரி தனமாக செயல்பட்ட சீனாவிற்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது.

நாசா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக நானும் வானில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க போகிறேன் என்று கூறிக்கொண்டு, அடங்காபிடரி தனமாக செயல்பட்ட சீனாவிற்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி மையமான டியாங்காங் 1 வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் விழுந்து நொறுங்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதற்கு முன்னர் எங்கு விழப்போகிறது என்று கணிக்க முடியாத நிலையில், புவியை நோக்கி வந்த கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது விண்வெளி ஆய்வு மையம் விழப்போகும் இடத்தை உறுதி செய்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இந்த விண்வெளி ஆய்வு மையமானது கடந்த 2011ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. அதுவரையில் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருந்த ஆய்வு மையம் 2016ஆம் ஆண்டில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டுச் சுற்றி வருவதாக சீனா வெளிப்படையாக தகவல் வெளியிட்டது.

சுமார் 8 ஆயிரம் கிலோவுக்கும் மேல் எடைகொண்டுள்ள இது வருகின்ற ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வாக்கில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் விழும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், புவியின் வளிமண்டல உராய்வு விசையின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் எரிந்து, அந்த சிதைந்த பாகங்கள் பூமியை தக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts