இந்நேரம் இங்கிருப்பார்.. அந்நேரம் அங்கிருப்பார்: பிரதமரின் பயணத்தை கசிய விட்ட வாலிபர் கைது..!!

இந்திய பிரதமர் மோடியின் விரிவான வாரணாசி பயணத்திட்டத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக இளைஞர் ஒருவரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரதமர் மோடி சமீபத்தில் தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு சென்றிருந்தார். அப்பொழுது அவர் எந்த சமயத்தில் என்ன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பது தொடர்பான விரிவான பயணத்திட்டம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியது.

இது தொடர்பாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவினர் உத்தரபிரதேச மாநில அரசிடம் புகார் செய்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அனுப் பாண்டே என்பவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனுப் பாண்டேவின் பெற்றோர்கள் காவல்துறையினரிடம் அனுப் பாண்டே இரண்டு வருடங்களுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் சமூக ஊடகக் குழுவில் பணியாற்றியதாகவும், ஆனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் வாரணசிக்குத் திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்ப்பட்டுள்ள அனுப் பாண்டே பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரதமர் மோடியால் பின்தொடரப்படும் 1932 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts