தாயின் கவனக்குறைவால் 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்து குழந்தை பலி

தாயின் கவனக்குறைவால் 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சென்னை மாம்பலம் துக்காராம் 3-வது தெருவில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியினருக்கு கண்ணன் என்ற ஒன்றரை வயது மகன் இருந்திருக்கிறான். 2-வது மாடியில் இவர்கள் வசித்து வந்திருக்கின்றனர்.

இன்று காலை தனது துணிகளையெல்லாம் துவைத்த முடித்த மகேஸ்வரி, தனது மகன்  முத்துராஜை இடுப்பில் வைத்துக்கொண்டே 2வது மாடியில் துணிகளை காய போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

மாடியின் ஓரத்தில்  நின்று அவர் துணிகளை காயப்போட்ட போது இடுப்பில் இருந்த கண்ணன் திமிறியிருக்கிறான். அந்த நேரத்தில் மகேஸ்வரி சற்றும் எதிர்பார்க்காதவிதமாக கண்ணன் திமிறி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கிறான். இதில் குழந்தை கண்ணனுக்கு தலையில் பலமாக அடிபட்டிருக்கிறது.

இதனையடுத்து உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. மாம்பலம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts