எங்கள் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டாம்: மாலத்தீவு அதிருப்தி!

காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் தலையிடாதது போல், இந்தியாவும் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என மாலத்தீவு அறிவுறுத்தியுள்ளது.

 

மாலத்தீவில் அரசியல் நெருக்கடி காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள மாலத்தீவு அமைச்சர் முகமது ஷாய்னீ, மாலத்தீவு சிறிய நாடாக இருந்தாலும் சுதந்திரமான நாடு என்று கூறியுள்ளார். அதன் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் திறன் அதற்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உதவி ஏதும் தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் அதை நேரடியாக கேட்போம் என்று கூறியுள்ள அவர், காஷ்மீர் பிரச்னையில் நாங்கள் தலையிடுகிறோமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாலத்தீவில் அரசியல் சிக்கலை தீர்க்க இந்தியா முயற்சிகள் தொடங்கியுள்ள, நிலையில் மாலத்தீவு அமைச்சரின் இக்கருத்து வெளியாகியுள்ளது. காஷ்மீரை குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர் பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts