லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்!! சமுர்த்தி உத்தியோகத்தர் பலி- படங்கள்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மாவடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் கிரான் பிரதேச செயலக பிரிவில் சமூர்த்தித் திட்ட உத்தியோகத்தராகக் கடமையாற்றும் கறுவல்தம்பி வரதராஜன் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை கோதுமை மா ஆலையிலிருந்து கல்முனை நோக்கி கோதுமை மாவை ஏற்றிவந்து கொண்டிருந்த லொறியும் வந்தாறுமூலையிருந்து சித்தாண்டி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வரதராஜன் படுகாயமடைந்த நிலையில் அருகிலிருந்த மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.

ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு லொறிச் சாரதியைக் கைது செய்துள்ளதோடு லொறியையும் கைப்பற்றி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts