அம்மன் கோவில் உண்டியலை ஆட்டைய போட்டு ஓடியவனை மடக்கி பிடித்த பொலிஸ்!

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்திலுள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிச் சென்ற நபரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய சில மணி நேரங்களில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திருடிச்செல்லப்பட்ட உண்டியலில் இருந்து சுமார் 1200 ரூபாய் பெறுமதியான நாணயக் குற்றிகளும், தாள்களும் மீட்கப்பட்டன.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts