யாழில் சட்டவிரோத மாடுகடத்தல்!! அதிரடியாக மடக்கிய இளைஞர்கள்! கைதுசெய்த பொலிசார்- படங்கள்

புங்குடுதீவு உலகமையத்தின் தொடர் விழிப்புணர்வு , முயற்சிகளின் காரணமாக இன்று அதிகாலை நான்கு மணியளவில் மண்டைதீவு சோதனை சாவடியில் வைத்து சட்டவிரோத கால்நடை கடத்தல் கும்பல் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் பெருங்காடு தீவாணிபுலம் , சங்கத்தார்கேணி , ஒன்பதாம் வட்டாரம் வல்லன் பகுதி , எட்டாரம் வட்டாரம் மடத்துவெளி பகுதி , ஏழாம் வட்டாரம் ஊரதீவு பகுதிகளிலிருந்து அப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற சில ஈனப்பிறவிகளின் உதவியோடு நீண்டகாலமாக மேற்படி சட்டவிரோத செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவந்தன .

இதனை தடுக்கும் நோக்கில் இரவில் வீதியில் நிற்கும் இளைஞர்கள் தொடர்பாக தகவல் அவர்களுக்கு கிடைத்தால் படகுகளில் கடலால் மாடு, பசுக்களை வெட்டி இறைச்சியாக கடத்தும் செயற்பாடும் இடம்பெற்று வந்தது .

தீவக சிவில் சமூக அமைப்பின் தொடர்ச்சியான வேண்டுகோளின் காரணமாக நேற்று முந்தினமே மண்டைதீவு சந்தியில் இரவு நேரத்தடை நடைமுறைப்படுத்த பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

மேற்படி தடையின் காரணமாகவே புங்குடுதீவிலிருந்து தப்பிச்சென்று கொண்டிருந்த இந்த வாகனத்தினை கைதுசெய்யமுடிந்துள்மை குறிப்பிடத்தக்கது .

இதற்கான ஏற்பாட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்திய யாழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துசித் குமார அவர்களும் மேற்படி கைது நடவடிக்கையினை மேற்கொள்ள மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி விவேகானந்தராஜ் அவர்களும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts