காணாமல் போயிருந்த முஸ்லிம் வர்த்தகர் சடலமாக மீட்பு- படங்கள்

காத்தான்குடி நகரிலிருந்து கடந்த சனிக்கிழமை (10/03) இரவு காணாமல் போயிருந்த வர்த்தகரான ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (35) மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகரான ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது-35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் வழமைபோன்று சனிக்கிழமை இரவு தனது மஞ்சந்தொடுவாயிலுள்ள தொழிற்சாலையிலிந்து வெளியேறி அருகிலிருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி விட்டு வெளியேறியிருந்தார் என்றும், அதன் பின்னர் அவர் வீடு வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts