எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்…! ஆபத்தாய் முடிந்த பியூட்டி பார்லர் அட்ராசிட்டி

ஜார்ஜியாவை சேர்ந்த இளம்பெண் பியூட்டி பார்லர் சென்று தன் முடியை இழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியாவைச் சேர்ந்த சியரா பாயன்ஸ்(20). இவர் அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு ஹேர் ஸ்டைலுக்காக சென்றுள்ளார். சுருட்ட முடிகொண்ட சியரா அவரின் முடிகளை ஸ்டிரைட் செய்ய சொல்லி கேட்டுள்ளார். பியூட்டி பார்லரில் இருந்தவர் அனுபவமில்லாமல் சியராவின் முடிகளை முதலில் இழுத்து கட்டியுள்ளார். இதனால் சியராவின் முடிக்கால்களில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதோடு முடிகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக கொட்டத் தொடங்கியதாக கூறப்படுகிறது. பாதி முடி கொட்டிய நிலையில், பார்க்கவே கோரமாக தெரிந்த சியரா, தனது முடி முழுவதையும் மொட்டையடிக்கும்படி கூறியுள்ளார்.

தனது அழகான முடியை இழந்த சியரா, எனக்கு நடந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது. மொட்டையை மறைக்க தற்போது நான் விக் வைத்துள்ளேன். பெண்களே உஷார் இனி பியூட்டி பார்லர் செல்லும் போது கைதேர்ந்த, பழக்கப்பட்டவரிடம் உங்களின் முடியையும், முகத்தையும் ஒப்படையுங்கள் என கூறியுள்ளார்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts