மருந்து, மருத்துவமனை “கை” விட்டாலும் இவர் கைவிடார்..! பறந்து போகும் சிறுநீரக பிரச்சனை..! தெரியுமா உங்களிற்கு

திருச்சி மாவட்டம் லால்குடி ஊட்டத்தூர் பகுதியில் அமைந்துள்ள கோவில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்.


தேய்பிறை அஷ்டமி தினத்தில் அங்குள்ள யாகத்தில் பங்கேற்றால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது நவகிரகங்கள்,12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் அமைந்த சிறப்பு பெற்றது.

கோவில் கருவறை எதிரில் உள்ள பிரம்ப தீர்த்த தண்ணீர் வீரியம் மிக்கதாக கருதப்படுகிறது

முதுமையை வெல்லும் ரசாயணம் குணம் கொண்ட இந்த தண்ணீரை குடித்து ராஜ ராஜ சோழன் நோயில் இருந்த விடுப்பட்டு, நீண்ட ஆயுள் பெற்றதாக கூறப்படுகிறது

கோவில் ஈஸ்வரன் பெயரில் இருந்தாலும்,இங்குள்ள நடராசன் சிலையை பார்க்க தான் நிறைய பேர் வருகிறார்கள்….

சூரிய கதிர்களை உள்வாங்கி உமிழும் சக்தி வாய்ந்த பஞ்சரதன கல்லால் ஆன நடராஜர் சிலை ஆசிய கண்டத்திலேயே இங்கு மட்டும் தான் உள்ளது என்ற வரலாற்று எவிடென்ஸ் உள்ளது.

வெட்டி வேர் மாலையை இந்த நடராஜர் சிலைக்கு சாத்தப்படுவது வழக்கம்.சாமியை தரிசனம் செய்ய வருகை புரியும் பக்தர்கள் இந்த வெட்டி வேரை வாங்கி சென்று,அன்று இரவு தண்ணீரில் அதனை ஊற வைத்து, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சரியாக 48 நாள் குடித்து வர இதுவரை தீராத சிறுநீரக நோயும் தீர்ந்து விடுகிறதாம்.

ஒரு முறை இருமுறை மருத்துவமனை சென்று கைநழுவிய பின்னர்,இங்கு வந்து தேய்பிறை அஷ்டமி யாகத்தில் கலந்துக் கொண்டு,நடராஜர் வெட்டி வேர் வாங்கி செல்கின்றனர்.

சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.

சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

அஷ்டமி திதியன்று கால பைரவருக்கு யாகம் நடத்தி, அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து காலாஷ்ட மந்திரம் ஓதி வழிபாடு செய்தால் மரண பயம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts