விஜயகாந்த் மகன் நடிக்கும் மதுரவீரன் நாளை இணையத்தில் வெளியாகாது : இணைய தளம் அறிவிப்பு

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படம் “மதுர வீரன்”. இதில் அவருடன் சமுத்திரக் கனி, மீனாட்சி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் இயக்குனர் பி ஜி முத்தையா. இப்படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி பணியாற்றுகிறார். இந்தத் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

திரையரங்கில் வெளியாகும் எந்த ஒரு படமும் இதுவரை அதே நாளில் இணையத்தில் (அதிகார பூர்வமாக) வெளியானது இல்லை. இந்நிலையில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் மதுர வீரன் படம் நாளை திரையரங்குகளிலும் டெண்ட் கொட்டா என்னும் இளையதளத்திலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள திரைப்பட ரசிகர்கள் பணம் கட்டி பார்க்கலாம் எனவும் கூறப்பட்டது.

தற்போது டெண்ட்கொட்டா இணைய தளம் மதுர வீரன் திரைப்படம் நாளை இணையத்தில் வெளியாகாது என அறிவித்துள்ளது.

திரையரங்குக்ளில் வெளியாகும் அதே நாளில் அந்தப் படத்தை இணயத்தில் வெளியிடுவதில் சிரமம் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படம் வெளியாகி சில நாட்களில் அமேசான் பிரைம் இணைய தளத்தில் தற்போது திரைப்படம் வெளி ஆவதற்கு ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதையொட்டியே இணைய தளம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts