கெத்துன்னு நினைத்து தப்பு பண்ணிவிட்டேன் : கதறிய பைக் ரேஸர் பீட்டர்..! போலீஸ் டிரீட்மெண்ட் சும்மாவா..? வைரல் வீடியோ..!!

கெத்துன்னு நினைத்து தப்பு பண்ணிவிட்டதாக பைக் ரேஸர் பீட்டர் போலீஸ் கைதுக்கு பிறகு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வேகமாக வந்த இளைஞர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்து வேகமாக பைக்கை எடுத்த அந்த இளைஞர்கள் பாதுகாப்பிற்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை இழுத்துக்கொண்டே சென்றனர்.

போலீஸார் துரத்தி பிடிக்க முயன்றும், அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்நிலையில், பீட்டர் என்பவர் ஃபேஸ்புக் லைவில், போலீஸ் தங்களை மறித்ததால் ஆத்திரமடைந்ததாகவும், அதனால் பேரிகார்டை இழுத்து சென்றதாக வாக்குமூலம் அளிப்பது போன்று பேசியுள்ளார்.

அந்த வீடியோ வெளியான ஒரு சில மணிநேரத்தில் சைபர் கிரைம் போலீஸார் பீட்டரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

போலீஸ் விசாரணைக்கு பிறகு பீட்டர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கெத்துன்னு நினைத்து தப்பு பண்ணிவிட்டேன். அதனால் பொதுமக்களுக்கு எவ்வளவு பாதிப்பு என்று இப்போது புரிகிறது. இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என்று பேசியுள்ளார்.

இளைஞர்கள் தங்களுடைய சந்தோஷத்தை மட்டும் பார்க்காமல் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படாதவாறு சட்டத்தின்படி நடந்து கொண்டு, இரவு பகல் பாராமல் பாதுகாப்பில் இருக்கும் காவல்துறையினருக்கு உதவியாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த பீட்டர் போன்று கெத்து என்று நினைத்து சிக்கலில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts