வெந்தயக்கீரையுடன் இவற்றை சேர்த்து சாப்பிட்டால் கண்பார்வை குறைவடையாதாம்..! தெரியுமா உங்களிற்கு

வெந்தயக்கீரையில் கலோரி, விட்டமின் A, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்களை கொண்ட வெந்தயக் கீரையை எப்படி சாப்பிட்டால், அதனுடைய முழு நன்மைகளையும் பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெந்தயக் கீரையில் அல்வா தயாரித்து அதை காலை மற்றும் மாலை வேளைகளில் சிறிதளவு சாப்பிட்டு வந்தால், உடலின் அதிகப்படியான சூடு குறைந்து, சீதபேதி பிரச்சனைகள் குணமாகும்.

உணவில் வெந்தயக் கீரையை சேர்த்துக் கொண்டால், அது வயிற்றுப்போக்கை நிறுத்த உதவுவதுடன், மாதவிடாய் கோளாறுகளை போக்கி, உடலில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்து உடலின் வலிமையை அதிகரிக்கும்.

வெந்தயக் கீரையைக் காலையில் கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால், வாய்வு தொல்லைகள் நீங்கி, செரிமானம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

வெந்தயக் கீரையை தண்ணீர் விட்டு வதக்கி, காலை மற்றும் மாலை வேளைகளில், 1/2 டம்ளர் குடித்து வந்தால், நெஞ்சுவலி குணமாகும்.

வெந்தயக் கீரையை வேகவைத்து, அதனுடன் சர்க்கரை மற்றும் கோதுமை மாவு கலந்து அல்வா போல செய்து சாப்பிட்டால், மாரடைப்பு, கண்பார்வை குறைவு, வாதம், சொறி சிரங்கு, ரத்தசோகை ஆகிய பிரச்சனைகள் குணமாகும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts