காதல் வாழ்க்கை இனிக்கணுமா?? காதலிக்கிறவங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய படங்கள் இவைதான்

தமிழ் சினிமாவும், காதலும் அன்றில் பறவைகளைப் போல பிரிக்க முடியாத ஒன்று. நூற்றாண்டு கால தமிழ் சினிமாவில் காதல் இல்லாமல் ஏதாவது படங்கள் இருக்கிறது என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான்.

தமிழ் சினிமாவில் காதல் இல்லாத படங்களை இல்லை. தலைமுறைகள் மாற்றமடைவது போல காதலும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மாறிக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட ஒவ்வொரு தலைமுறை காதலையும் நாம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் மட்டுமே காண முடியும்.

அந்தவகையில் தமிழ்சினிமாவில் இன்றும் இனிமையாகவும், புதுமையாகவும் இருக்கும் படங்களை இப்போதுப் பார்க்கலாம்.!
( முக்கிய குறிப்பு ; இதெல்லாம் காதலிக்கிறவங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய படங்கள் )


அலைகள் ஓய்வதில்லை.!
காதல் எப்படி செய்வது நாம் பாரதிராஜாவிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். சாதி விட்டு சாதி தாண்டிய காதல் என்பது இன்றைய தலைமுறையினருக்கே கேள்விக்குறியாய் இருக்கிறபோது, மதம் விட்டு மதம் தாண்டிய காதலைச் சொன்ன படம்.

காதலுக்கு மதமெல்லாம் முக்கியமில்லை என்று முகத்திலறைந்து சொன்ன, இந்தப் படத்தின் காதல் காட்சிகள் க்ளாஸிக் ரகம்.!


புன்னகை மன்னன்.!
இயக்குநர் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் உருவான இந்த படம் காதலுக்கு புது வண்ணம் தீட்டியிருக்கும், தற்கொலையில் ஆரம்பித்து அதையும் மீறி உனக்கென ஒருத்தி / ஒருத்தன் இருப்பார்கள் என்று சொன்ன படம் தான் புன்னகை மன்னன்.

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் இன்றுக் கேட்டாலும் நம்மில் காதல் துளிர்க்கும். காதல் தோல்வியில் இருக்கும் கமலுக்குள் புது காதல் துளிர் விடுவதுதான் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு.!


காதல் கோட்டை.!
பலவகை காதலைப் பார்த்த தமிழ் சினிமாவிற்கு காதல் கோட்டை புதுவிதக் காதலை சொல்லித் தந்த படம். பார்க்காமலே காதல் செய்யும் இரு காதலர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.

இன்றைக்கும் பார்க்காமல் காதல் செய்யும் இளைஞர்களுக்கு முன்னோடியாக இருப்பது காதல் கோட்டை படம் தான்.


மௌனராகம்.!
இந்த படத்திற்கு தமிழ் சினிமாவில் என்றும் நிரந்தர இடம் உண்டு. அதற்கு முக்கிய காரணம் இது பெண்ணின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இது தலைமுறைகளைத் தாண்டிய காதல் கதை.

மோகன், ரேவதி கல்யாணத்திற்கு பின் நடக்கும் காட்சிகளும், சம்பவங்களும் படத்தைப் பார்க்கிறவர்களுக்கும் இதுபோன்ற ஒரு காதலை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றும்.

அலைபாயுதே.!
இன்றைய கல்லூரி இளைஞர்களுக்கும் காதலைச் சொல்லிப் படக்கும். இந்த படத்தைப் பார்த்து நிறைய காதலர்கள் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்த கதையும் உண்டு.

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹமான் இசையில் உருவான இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. இது காதல் ரகம் என்பதை விட கவிதை ரகம் என்றே சொல்லலாம்.!


காதலர் தினம்.!
இண்டெர்நெட்டில் காதல் என்கிற கான்செப்டை அறிமுகம் செய்தது இப்படத்தின் இயக்குனர் கதிர்தான். குணால், சோனாலி நடிப்பில் வந்த இப்படத்தின் தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது.

இப்போது அனைத்து காதல்களுமே இண்டெர்நெட்டில்தான் ஆரம்பிக்கிறது என்றால் அதற்கு ஆரம்பப் புள்ளி காதலர் தினம்.!


பிரேமம்.!
மொழித் தாண்டி வெற்றி பெற்ற காதல் படம் என்றால் அது நிச்சயமாக பிரேமமாகத் தான் இருக்கும். பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், கல்லூரிக்குப் பிறகான பருவம் என மூன்று பருவங்களின் காதலைச் சொல்லும் படம். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா என அனைவரும் படத்தை அலங்கரித்துள்ளனர்.

ராஜேஷ் முருகேசன் இசையில் ‘மலரே’ பாடல் மிகப் பிரபலம். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கடந்து சென்ற காதல்களை நினைவுபடுத்தும் படம்! நம்ம சேரனின் ஆட்டோகிராஃபின் மாடர்ன் வெர்ஷன்!


சில்லுனு ஒரு காதல்.!
திருமணத்திற்கு பிறகு உருவாகும் காதலும், பந்தமும் நீடித்து நிலைக்கும் என்பதே இப்படத்தின் தீம். சில்லுனு ஒரு காதல் வெறும் படம் மட்டுமல்ல, நம் அனைவரும் வாழ்க்கையில் கடந்த வந்த மிகச் சிறந்த காதல் பாடம்.

ஒருவேளை நம் கணவனின் முன்னாள் காதலி கண்முன் வந்து நிக்கும் போது அவன் மனநிலை என்னவாக இருக்கும் என்று பெரும்பாலான மனைவிகளை யோசிக்க வைத்த படம்.!


காதலுக்கு மரியாதை.!
நிஜமாகவே காதலுக்கு மரியாதை செலுத்திய படம் இது. “காதலுக்கு அழிவில்லை” அனைத்துப் படங்களும் இறுதியில் கூறும் கருத்து இதுதான். இதுபோல எண்ணற்ற படங்கள் இன்னும் உள்ளன. காதல் என்பது கடைசி உயிர் பூமியில் வாழும்வரை நிலைத்திருக்கும்!


ஒகே கண்மனி.!
பதினைந்து வருடங்களுக்குமுன் பரவசப்பட்ட அதே அலைபாயுதே அனுபவம். படம் நெடுக பொங்கி வழியும் இளமை. இன்றை இளைஞர்களின் உலகை அப்படியே பிரதிபலிக்கிறார்கள் துல்கர் சல்மானும், நித்யா மேனனும்.

மணிரத்னத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் இளமை உற்சாகம். திருமணத்தின் போது பரஸ்பரம் இருவரும் பேசிக் கொள்ளும் காட்சி போல் படம் நெடுக இனிப்பு தூவல்கள்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts