இருமலர்கள் நடிகையை தாக்கிய நோய் : சீரியலில் இருந்து விலகுகிறாரா பிரகியா?

சில ஆண்டுகளாகவே தமிழில் தொடர்கள் எடுப்பதற்கு இணையாக இந்தியில் முன்பு எடுத்த தொடர்களை தமிழில் டப் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.அந்த வகையில் ஒளிபரப்பானது தான் இருமலர்கள்.

இந்த தொடர் முதலில் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்த தொடர் பிறகு மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த தொடர் இந்தியிலும் ஒளிபரப்பாகிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் அந்த தொடரில் நாயகியாக நடிக்கும் பிரக்யா என்கிற ஸ்ரீதி ஜா, தற்போது காசநோய் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் இவர் சீரியலில் இருந்து விலகிவிடுவாரா என்று அவரது தீவிர ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இப்போது இந்தியில் ஒளிபரப்பாகும் இருமலர்கள் (கும் கும் பாக்கியா) தொடரில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரீதி ஜா.

படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்ததால் பிரச்சனை ஏற்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றார் போல் அவர், தன்னுடைய சமூக வலைதளத்தில் வீட்டில் ஓய்வு எடுக்கும் புகைப்படங்களை நிறைய ஷேர் செய்து வருகிறார்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts