தலைவர் பிறந்த ஊரா இது??? வியந்த போன மக்கள்! வல்வெட்டித்துறையில் நடந்த திருவிழா கொண்டாட்டம்…

பிரபாகரன் பிறந்த ஊரா இது??? வியந்த போன மக்கள்! வல்வெட்டித்துறையில் நடந்த திருவிழா கொண்டாட்டம்

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த பெருந்திருவிழாவின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு இடம்பெறும் வல்வை இந்திரவிழா வெகு விமரிசையாக நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி மின் விளக்குகள், சோடனைகள், இந்து தெய்வங்களின் பிரமாண்ட பதாகைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

ஒரே நேரத்தில் 10 இசைக் கச்சேரிகள், பரத நாட்டியங்கள், வண்ண வண்ண மின்னலரங்காரங்கள், சிறார்களைக் கவரும் பலவகையான உருவங்கள், இராட்சத புகைக்கூண்டுகள் என வல்வை நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரை வீதிகளெங்கும் பல்வேறு மின்னலரங்காரங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது

இந்திர விழாவில் குடாநாட்டிலிருந்து மட்டுமல்லாமல் தமிழர் தாயகத்தில் பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்றனர்.

தொங்குபாலத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியும் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.ஆங்காங்கே வந்த மக்களின் தாகம் தீர்க்க சர்பத், கோப்பி, தேநீர் என்பன வல்வை மக்களால் அன்புடன் பரிமாறப்பட்டு இருந்தன.

கிட்டத்தட்ட வல்வையிலுள்ள கோவில் சார்ந்த அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், மீனவ அமைப்புக்கள் என அனைத்து அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இந்திரவிழாவுக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

நிகழ்வுக்கு வந்த பார்வையாளர்கள் எதை பார்ப்பது எதை விடுவது எனத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.அன்னைபூரணி பாய்மரக் கப்பல் தொடர்பிலான வரலாறும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

சக்சாபோன் கலைஞர்கள் தவில் கலைஞர்களுடன் இணைந்து நடாத்திய இசைக்கச்சேரி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

இந்திரவிழா நிகழ்வுகளை இரவு 12 மணியையும் தாண்டி குடும்பம் குடும்பமாக மக்கள் தங்கியிருந்து பார்த்து இரசித்தமை குறிப்பிடத்தக்கது

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts