ஹிமாச்சல் பஸ் விபத்து: பள்ளி குழந்தைகள் 26 பேர் பலி

ஹிமாச்சல் பஸ் விபத்து: பள்ளி குழந்தைகள் 26 பேர் பலி

காங்காரா : ஹிமாச்சலில் பள்ளி குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 26 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஹிமாச்சல் பிரதேசம் காங்காரா மாவட்டத்திலுள்ள நார்பூர் பகுதியில் பள்ளி குழந்தைகள் சென்ற பேருந்து மலையிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 26 குழந்தைகள் பலியாயினர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேருந்துக்குள் மாணவர்கள் பலர் சிக்கியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் அதிகளவில் குழந்தைகள் ஏற்றப்பட்டதாக தெரியவருகிறது.காங்காரா விபத்தில் 26 குழந்தைகள் பலியானதை அம்மாநில அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் உறுதி செய்துள்ளார்.
மேலும் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts