ரயில் மோதியதில் டிக்கெட் பரிசோதகர் உயிரிழப்பு!

ரயில் மோதியதில் டிக்கெட் பரிசோதகர் உயிரிழப்பு!

நாகர்கோவிலில் ரயில் மோதிய விபத்தில், பெண் டிக்கெட் பரிசோதகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலியை சேர்ந்த மீரா, ரயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இன்று வழக்கம் போல் பணியில் இருந்த அவர், நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் இருந்து இறங்கி, சந்திப்பு ரயில் நிலையத்துக்கு தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயில், எதிர்பாராதவிதமாக மீரா மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts