தீய சக்தியை தடுத்து நிறுத்தும், ​​​புறா​,​மீன், நாய், பூனை!

தீய சக்தியை தடுத்து நிறுத்தும், ​​​புறா​,​மீன், நாய், பூனை!

பூனை முதற் கொண்டு யானை வரை வளர்ப்பு பிராணிகளாக முன்னோர்கள் வளர்த்ததன் காரணமும் இதுதான்.

கண் திருஷ்டி மட்டுமின்றி, செய்வினை, சூன்யம், துர் ஆவிகள், பேய், பிசாசு போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் வளர்ப்பு பிராணிகளுக்கு உண்டு. மேலும் மேற்கண்ட துர் சக்திகளால் விளையும் தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தியும் வளர்ப்பு பிராணிகளிடம் உண்டு.

ஒரு சில வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் திடீரென இறந்து விடும், இதற்கு காரணம், மிகவும் கொடுரமான வலிமைவாய்ந்த கெடுதலை, வளர்ப்பவருக்கு ஏற்படாமல் இருக்க, வளர்ப்பு பிராணிகள் ஏற்றுக் கொண்டு, அவை மரணத்தை தழுவும். அதாவது தன் உயிரை கொடுத்து வளர்ப்பவரை காப்பாற்றும்.

தனிப்பட்ட ஒரு விலங்கை, மீனை எந்த சாஸ்த்திரமும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஓர் அறிவு, இரண்டறிவு முதற்கொண்டு ஐந்தறிவு உள்ள மிருகங்கள் வரை அனைத்தையும் மனிதன் வளர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

வளர்ப்பு விலங்குகளால் மனிதனுக்கு ஏற்படும் நல்ல மற்றும் தீய பலன்களை என்னவென்று நாம் அறிந்து கொள்ள நமது முன்னோர்கள் அஷ்வ லட்சணம், கஜ லட்சணம் போன்ற தனி சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். அவற்றில் மிக முக்கியமான பகுதி மனிதன் ஏன் வீட்டு விலங்குகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு தரும் விளக்கங்கள் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது.

அந்த வகையில் பார்த்தால் நமது வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்துமே நமக்கு வருகின்ற துயரத்தை தான் வாங்கி கொண்டு வாழ்கின்றன அல்லது மறித்து போகின்றன. இந்த நியதிக்கு ஆனை முதல் பூனை வரை பொருந்தி வரும். அத்தோடு நாம் வீட்டில் வளர்க்கும் மீன்களும் கூட நமது கஷ்ட நஷ்டங்களை தனக்குள் ஈர்த்துகொள்ளும் என்று சொல்லபடுகிறது. அதனடிப்படையில் எந்த வகை மீனை வளர்த்தாலும் அதன் பயன் ஒன்று தான் என்பது தெளிவாக தெரிகிறது.

தற்போதைய கால கட்டத்தில் நகரமயமாகிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கிராமங்களைத் தவிர்த்து நகரத்தில் ஆடு, மாடு, குதிரை, யானை போன்றவற்றை வளர்ப்பது சாத்தியமில்லை. ஆனால் மீன் வளர்ப்பது என்பது அனைவராலும் முடியும்.

வாஸ்து மீன்தான் வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, எந்த வகை மீனையும் வளர்க்கலாம், குறிப்பாக வண்ண மீன்கள் பல வண்ணங்களில் வளர்க்கலாம், வளர்க்க இட வசதி இருந்தால், கூடுதலாக பூனை, நாய் போன்றவற்றையும் வளர்க்கலாம்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts