இலங்கையர்களை திகைக்க வைத்த பிரித்தானிய பெண்! இப்படியும் மனிதர்கள் உண்டா?

இலங்கையின் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளை கண்ட இளம் பெண் ஒருவர் அதனை பிரித்தானியாவுக்கு கொண்டு செல்ல நிதி திரட்டி வருகின்றார்.

Helena Hanson பிரித்தானிய பெண் தனது கணவருடன் சுற்றுலா வந்த போது 4 நாய் குட்டிகள் பசி மற்றும் குளிரில் நடுங்கிய நிலையில் கண்டுள்ளார்.

அந்த பெண் குறித்த நாய் குட்டிகளை உணவகம் ஒன்றுக்கு கொண்டு சென்று உணவளித்து குளிரை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் அந்த 4 குட்டிகுளுக்கு அவர் பெயர் வைத்துள்ளார். அந்த நாய் குட்டிகள் பிறந்து ஒரு நாள் தான் என தெரியவந்தவுடன் ஆச்சரியமாக இருந்தது என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

4 குட்டிகளில் ஒன்று மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இலங்கை தெருக்களில் நாய் குட்டிகள் இவ்வாறு தனித்து விடப்படுவது பொதுவான ஒரு விடயமாகியுள்ளதாகவும், அதன் தாய் குட்டிகளுக்கு உணவு தேட சென்று விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக பட்டம் பெற்ற Helena இலங்கையில் உள்ள 1200 தெரு நாய்களை காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் மோசமான நிலையை அடைந்த நாய் குட்டி உயிரிந்தமையினால் மீதமுள்ள குட்டிகளை தான் பிரித்தானியாவில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், அங்கு அவை சுற்றி திரிந்து விளையாட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாய் குட்டிகளை கொண்டு செல்வதற்கு கிட்டத்தட்ட 2000 பவுண்டகள் தேவைப்படுவதாகவும், அதற்காக தாம் நிதி உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர்கள் நிதி சேகரிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு 500 பவுண்ட் நிதியை அவர்களால் தேட முடிந்துள்ளதென அவர் மேலும் கூறியுள்ளார்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts